ஹஜ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) - இராமேஸ்வரம் இடையே செங்கோல் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்! 
நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டதன் புகழை போற்றும் வகையில் ஹஜ்ரத் நிஜாமுதீன் தில் லியிலிருந்து ராமேசுவரத்துக்கு செங்கோல் விரைவு ரயில் இயக்க வேண்டுமென பாஜக பொதுச் செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி கோரிக்கை மனு:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைத்திருப்பது தமிழர்களை வைத்துள்ளது. மேலும், தமிழ்மொழியான செம்மொழியை பெருமைப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஆதீனங்களை அழைத்து தேவாரம் ஓதசெய்து தமிழின் புகழை உலகம் முழுவதும் கொண்டுசென்றிருப் பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக பாஜகவுக்கு தமிழக மக்கள் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த புகழை உலகறிய செய்யும் வகையில் டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து புனிததலமாக விளங்கிவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப் துல் கலாம் பிறந்த ராமேசுவரத்துக்கு 

சென்னை, விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் வழியாக செங்கோல் என்ற பெயரில் விரைவு ரயில் இயக்க பிரதமர் நரேந்திர மோடி பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments