கோபாலப்பட்டிணத்தில் முக்கிய இடங்களில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றிய ஜமாத் நிர்வாகம்.!!

கோபாலப்பட்டிணத்தில் முக்கிய இடங்களில் குவிந்து கிடந்த குப்பைகளை ஊர் ஜமாத் நிர்வாகம் அகற்றியது.

புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் பல்வேறு முக்கிய பகுதிகளில் மலைபோல் குவிந்தும் சில பகுதிகளில் சாலைகளை சூழ்ந்தும் காணப்பட்டது. குப்பையை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜமாத் நிர்வாகம் நேற்று 27/06/2023 ஈத்கா மைதானம் அருகில் சாலையை சூழ்ந்திருந்த குப்பைகள் மற்றும் சின்னப்பள்ளிவாசல் பாப்புலர் பள்ளிக்கூடம் அருகில் குவிந்திருந்த குப்பைகள் என பல்வேறு பகுதிகளில் மலைபோல் குவிந்திருந்த குப்பையை JCB மற்றும் டிராக்டர் உதவியுடன் அகற்றினர்.
இதற்காக முயற்சி எடுத்த அனைத்து நல்லுங்களுக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments