திருச்சியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் ஜூலை 25,26,27 (3 நாட்கள்) காரைக்குடி - திருச்சி - காரைக்குடி முன்பதில்லாத எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்


திருச்சியில் நடைபெறும்  பராமரிப்பு பணிகள் ஜூலை 25,26,27 (3 நாட்கள்) காரைக்குடி - திருச்சி - காரைக்குடி முன்பதில்லாத எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

06126 காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ் 

(25/07/23) முதல் 27/07/23 வரை 3 நாட்களுக்கு 
புதுக்கோட்டையிலிருந்து தினசரி காலை 07:50 மணிக்கு புறப்படும் 06126/காரைக்குடி-திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் குமாரமங்கலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். 

மேலும் இந்த ரயில் குமாரமங்கலம்-திருச்சி சந்திப்பு இடைய பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

06125 திருச்சி - காரைக்குடி எக்ஸ்பிரஸ் 

(25/07/23) முதல் 27/07/23 வரை 3 நாட்களுக்கு திருச்சியிலிருந்து தினசரி மாலை 06:15 மணிக்கு புறப்படவேண்டிய 06125/திருச்சி-காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் திருச்சி சந்திப்பு-  குமாரமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் இந்த ரயில் மேற்கண்ட 3 தினங்கள் மட்டும் குமாரமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 06:30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலில் தினசரி புதுக்கோட்டை-திருச்சி இடைய அலுவலக பயணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பட்ட பயணிகள் அதிகம் சென்று திரும்ப பயன்படுத்துவதால் இந்த செய்தியை பகிரவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments