மணமேல்குடி அருகே பயமறியானேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து வருகிற (ஜூலை.27) மாபெரும் சாலை மறியல் போராட்டம்!
மணமேல்குடி அருகே பயமறியானேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து வருகிற ஜூலை.27 மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், நெல்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட பயமறியானேந்தல் கிராமத்தில் தெரு மற்றும் சாலை ஆக்கிரமிப்பு அகற்றித்தராததை கண்டித்து வருகிற 27/07/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் மணமேல்குடி ECR கிழக்கு சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

பயமறியானேந்தல் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தெருவின் இரு புறங்களிளும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த மூன்று வருடங்களாக பல முறை மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் செவி சாய்க்காத காரணத்தால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கண்டன சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த மாபெரும் கண்டன சாலை மறியல் போராட்டமானது கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது.
1.உடனடியாக தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். 
2.மூன்று ஆண்டுகளாக டென்டர் எடுத்தும் கட்டப்படாத படித்துரையை உடனடியாக கட்டி தர வேண்டும்
3. பயமறியானேந்தல் ஏரி ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்ற வேண்டும்.

இப்படிக்கு:-
பயமறியானேந்தல் கிராம வளர்ச்சி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள்

தகவல்: சுதாகர், பயமறியானேந்தல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments