மீமிசல் ஊராட்சியில் மீன் மார்க்கெட் ஏலம் மற்றும் ஒருங்கிணைந்த வார சந்தை மற்றும் தினசரி மகமை வசூல் ஏலம் - மீமிசல் ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
மீமிசல் ஊராட்சியில்  மீன் மார்க்கெட் ஏலம் & ஒருங்கிணைந்த வார சந்தை மற்றும் தினசரி மகமை வசூல் ஏலம் - மீமிசல் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீமிசல் ஊராட்சியில் மீன் மார்க்கெட் ஏலம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் ஊராட்சி 2023-2024-ம் நிதி ஆண்டிற்கான மீன் மார்க்கெட் ஏலம், வருகிற 3.7.2023-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீமிசல் ஊராட்சி பல்நோக்கு பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவரால் பகிங்கரமாக ஏலம் விடப்படும் என மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் ஏலம் கேட்க விரும்புபவர்கள் ஏலம் முன்வைப்பு தொகையாக ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சத்திற்கான) வங்கி வரைவோலை (BANK DD) “தலைவர் மீமிசல் ஊராட்சி” என்ற பெயரில் கனரா வங்கி திருப்புனவாசல் கிளையில் மாற்றத்தக்க வகையில் செலுத்தி ஏலம் கேட்கலாம். ஏலம் முடிந்தவுடன் ஏலம் கேட்க மேற்படியாளர்கள் செலுத்திய வைப்புத்தொகை ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு PFMS முறையில் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் ஏலம் சம்பந்தமான மற்ற தகவல்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறாக மீமிசல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மீமிசல் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வார சந்தை மற்றும் தினசரி மகமை வசூல் ஏலம் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் ஊராட்சி 2023-2024-ம் நிதி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த வார சந்தை மற்றும் தினசரி மகமை வசூல் ஏலம், வருகிற 03.07.2023-ம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு மீமிசல் ஊராட்சி பல்நோக்கு பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவரால் பகிங்கரமாக ஏலம் விடப்படும் என மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் ஏலம் கேட்க விரும்புபவர்கள் ஏலம் முன்வைப்பு தொகையாக ரூ.50,000 (ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான) வங்கி வரைவோலை (BANK DD) “தலைவர் மீமிசல் ஊராட்சி” என்ற பெயரில் கனரா வங்கி திருப்புனவாசல் கிளையில் மாற்றத்தக்க வகையில் செலுத்தி ஏலம் கேட்கலாம். ஏலம் முடிந்தவுடன் ஏலம் கேட்க மேற்படியாளர்கள் செலுத்திய வைப்புத்தொகை ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு PFMS முறையில் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் ஏலம் சம்பந்தமான மற்ற தகவல்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறாக மீமிசல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments