செந்தலைப்பட்டிணத்தில் மையவாடியை சுத்தம் செய்த SISC இளைஞர்கள்
செந்தலை இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப் இளைஞர்கள் இணைந்து இன்று மையவாடியை சுத்தம் செய்தனர்.

செந்தலை மையவாடியில் அதிக அளவு கோரை புல் நடக்கும் பாதை தெரியாத அளவில் வளர்த்து இருந்தது இதனை செந்தலை இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப்  ( SISC ) சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து மையவாடியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சுத்தம் செய்யும் பணி 12:30 மணி வரை நடைபெற்றது. இப்பணியை மேற்கொண்ட SISC கிளப் இளைஞர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

மேலும் ஊர் இளைஞர்கள் இது போன்ற பல ஊருக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பது தன்னார்வலர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments