பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கழிவறைகள் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவிகளுக்கான கூடுதல் நவீன கழிவறைகள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கழிவறைகளை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தொடக்கவுரையாற்றினார். அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஐ.டி.சி. நிறுவனத்தின் பொதுமேலாளர் என்.டி.விஸ்வநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் ஊராட்சி மக்கள் நலப்பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments