பேராவூரணியில் கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்கம் ஆலோசனை கூட்டம்





காரைக்குடி சென்னை இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களில் அனைத்து விரைவு ரயில் களும் நின்று செல்வ நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பேராவூரணி நகர வர்த்தகர் கழக அலுவலகத்தில், கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் சங்கங்க ளின் நிர்வாகிகள் ஆலோச னைக்கூட்டம், பேராவூரணி நகர வர்த்தக கழகதலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

காரைக்குடி தொழில் வாணிபகழக நிர்வாகியும் ரயில் பயணிகள் சங்க தலைவருமான திராவிட மணி, கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வர்த்தககழகபொருளாளர் சாதிக் அலி வரவேற்றார். பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சிறப்புவிருந் தினராக கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில், பேராவூரணி, அதிராம்பட் டினம்ரயில்நிலையங்களில் அனைத்து விரைவு ரயில் களும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே காரைக்குடி சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண் டும் இயக்க வேண்டும். காரைக்குடி-சென்னை வழித்தடத்தில் இருமார்க் கத்திலும் பகல் இரவு நேர விரைவுரயில்களை இயக்க வேண்டும். பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில்
நிலைய மேம்பாட்டிற்காக வும் தேவைகளுக்காகவும், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், ரயில்வே உயர் அதிகாரி களை சந்தித்து கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

கூட்டத்தில் பேராவூரணி நகர வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் சுந்தப்பன், அன்பழகன், பாரதிவை.
நடராஜன், அப்துல்லா, வெங்கடேசன், லட்சுமணன், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கம் ராஜா, தில்லைவிளாகம் தாகிர். பட்டுக்கோட்டை விவேகானந்தன். பேராவூரணி மெய்ஞான மூர்த்தி மற்றும் லயன்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments