ஆலங்குடி அருகே ரூ.3½ கோடியில் சாலை விரிவாக்க பணிகள் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
ஆலங்குடி தாலுகாவில் சுமார் 20 ஆண்டு காலமாக பல கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆலங்குடியை சுற்றியுள்ள கிராமமக்கள் அமைச்சர் மெய்யநாதனுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து மனுக்களை அளித்து வந்தனர். இதைதொடர்ந்து சி.ஆர்.ஐ.டி.பி. 2022-23 ஆண்டிற்கான திட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணிகள் மற்றும் சாலையை வலுப்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சிகள்) கோகுலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments