புதுக்கோட்டை அருகே வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் லாக்கரில் இருந்த ஆவணங்கள்-நகைகள், பணம் தப்பின.
வங்கியில் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 7-ந் தேதி அதிகாரிகள் பணிகளை முடித்துவிட்டு வங்கியை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வங்கியில் இருந்து புகை வெளிவந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை, மணமேல்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியிலிருந்த கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.
வாடிக்கையாளர்கள் திரண்டனர்
லாக்கரில் இருந்த பணம், நகைகள், முக்கியமான ஆவணங்கள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக போலீசார் கூறினார்கள். வங்கியில் தீ விபத்து ஏற்பட்டவுடன் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகள் எரிந்து போய் இருக்கலாம் என கருதி வங்கி முன்பு கூடினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள், நகைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கூறினர்.
மேலும் மணமேல்குடி வங்கி கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரவு, செலவு கணக்குகளை அருகில் இருக்கும் மீமிசல் வங்கி கிளையில் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தீ விபத்தால் மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.