தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - இராமேஸ்வரம் ரயில் மானாமதுரை வரை மட்டுமே செல்லும்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16849/16850) மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். 

அதாவது, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 13-ந் தேதி வரை, 

15-ந் தேதி, 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, 

22-ந் தேதி, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மற்றும் 29-ந் தேதி ஆகிய நாட்களில் 

இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். மானாமதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும்.

செய்தி சுருக்கம்: பரமக்குடி சத்திரக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 11/07/2023 to 29/07/2023 வரை வெள்ளி & (14 நாட்கள் மட்டும்) வண்டி எண் 16849-16850(திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி) விரைவு வண்டி மானாமதுரை to ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது

குறிப்பு : திருச்சி - இராமேஸ்வரம் ரயில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது 

செய்தி சுருக்கம் (News Summary): 

சத்திரக்குடி - பரமக்குடி இடையே தண்டாவள பராமரிப்பு காரணமாக, திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி  முன்பதிவில்லாத விரைவு ரயில் 11/07/2023 முதல் 29/07/2023 வரை வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களை கவிர மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மானாமதுரையில் இருந்தே புறப்படும் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments