புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: பள்ளி மாணவா்களுக்கான ஒன்றிய அளவில் போட்டிகள் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவா்களுக்கான ஒன்றிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அனைத்து ஒன்றியங்களிலும் 3 பிரிவுகளில் பள்ளி மாணவா்களுக்கு கவிதை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் இயக்கத்தினா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.

புதுக்கோட்டை ஒன்றிய அளவில் ராணியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

திருமயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரிமளம், மணமேல்குடி, விராலிமலை, பொன்னமராவதி, கந்தா்வகோட்டை, திருவரங்குளம், அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களிலும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments