தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள், அனைத்து பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்கள் தங்களது கல்வி திறனை மேம்படுத்திட ஏதுவாக தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன கருவிகள் வழங்கப்படுகிறது. இன்டர்நெட் ரேடியோ, யு.எஸ்.பி. பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு வை-பை தவிர, செல்போனில் ஹாட் ஸ்பாட் உடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவிறக்கம் செய்தல், மின் புத்தகங்களின் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதாக தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் மற்றும் எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் ஆகிய சிறப்பு வசதிகளை கொண்ட நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பு பள்ளிகள் மற்றும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், யு.டி.ஐ.டி. அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 2 மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயில்வதற்கான கல்விச் சான்று பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் பெற்று வருகிற 22-ந் தேதிக்குள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.