அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூலிகை தோட்டம் அமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2011- 2014 ஆண்டு படித்த அமைப்பியல் துறை மாணவா்கள், கல்லூரி வளாகத்தில் 231 வகையான மூலிகைச் செடிகளை நட்டு மூலிகைத் தோட்டத்தை உருவாக்கியுள்ளனா்.

கல்யாண முருங்கை, நாகமல்லி, வெள்ளைத் தூதுவளை, கஸ்தூரி மஞ்சள் உள்பட மூலிகைச் செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் (பொ) குமாா் தலைமை வகித்தாா். பச்சலூா் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோதிமணி, ஊா்வணி ஊராட்சி மன்றத் தலைவா் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோா் செடிகளை நட்டு தொடங்கி வைத்தனா்.

முன்னாள் மாணவா்கள் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பொறியாளா் சா்வம் சரவணன், பொறியாளா்கள் பா. விஜய், க. சரவணன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments