சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்ல கூட்டத்தில் வலியுறுத்தல்





கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் கூட்டம் நடந்தது.

கல்லிடைக்குறிச்சி திலகர் பள்ளி தலைர்மையாசிரியர் பண்டார சிவன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜவகர், சகஸ்ர ராமன் முன்னிலை வகித்தனர்.  பேராசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார்.

புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக உமர் பாரூக், செயலாளர்களாக விஸ்வநாதன், ஜான் ஞானராஜ்,  பொருளாளர்களாக சகஸ்ர ராமன், சீதா கராமன், ஆலோசகராக அபுல்ஹசன் தேர்ந்தெத்டுக்கப்பட்டனர்.

கூட்டத்தில், கல்லிடைக்குறிச்சி 

மார்க்கத்தில் வாரத்தில் 3 நாள் இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவுரயில், 

தினசரி இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ், 

ஞாயிறு தோறும் இயக்கப்படும் நெல்லை -  மேட்டுப்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 
கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லவும், நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களுக்கு இணைப்பு ரயில்களை இயக்கவும், 

கல்லிடைக்குறிச்சி ரயில்வே பிளாட் பாரத்தின் நீளத்தை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொள்வது.

வரும் 29ம் முதல் ரயில்வே கட்டமாக, தேதி ஸ்டேஷனில் கவன ஈர்ப்பு மரம் நடும் விழாவை நடத்துவது, தொடர்ந்து சுதந்திர தின வாழ்த்துகளுடன், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 ஆயிரம் தபால் கார்டுகளை அனுப்புவது முடிவு செய்யப்பட்டது.

சங்கதலைவர் உமர் பாரூக் நன்றி கூறினார்.

கல்லிடைக்குறிச்சி புதிய அமைப்பு தொடங்கப்பட்டது!

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருமானம் தரும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் புதிதாக, "கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம்" ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

தலைவராக 
கல்லிடைக் குயில் உமர் பாரூக்,

செயலாளர்களாக
பேரா. விஸ்வநாதன்,
ஜான் ஞானராஜ்

பொருளாளர்களாக
சகஸ்கர ராமன்,
சீதாராமன்

ஆலோசகர்களாக ஜான் பால், அபுல் ஹசன் உட்பட நிர்வாக குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைமையாசிரியர் பண்டார சிவம் முன்னிலையில், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், திமுக, அதிமுக, மதிமுக, பாஜக, இஸ்லாமிய,, கிருஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.

மதுரை மண்டல பொது மேலாளரை நேரில் சந்தித்து மனு அளிப்பது,

அரசியல் தலைவர்களை அழைத்து கல்லிடை ரயில் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு கவனத்தை ஈர்ப்பது,

மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகளில் தனித்தனியே கையெழுத்து இட்டு கோரிக்கை அனுப்புவது....என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments