தொண்டியில் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவனுக்கு த.மு.மு.க. சார்பில் பாராட்டி கேடயம் வழங்கினர்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவி ஆதிபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனணயத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியா வில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடி களிலும் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இட ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் த.மு.மு.க. தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினு லாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.

கிளை தலை வர் காதர் வரவேற்றார். ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளா ளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்ட னர். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதே போல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments