மணமேல்குடியில் ஒன்றியக்குழு கூட்டம்




மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அரசமணி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments