திருச்சியில் தண்டாவள பராமரிப்பு பணி: திருவாரூர்- காரைக்குடி‌ பாதையில் சில ரயில்கள் இயக்கம் (Diversion)
திருச்சியில் தண்டாவள பராமரிப்பு பணி: திருவாரூர்- காரைக்குடி பாதையில் சில ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக (Line block and Power block) 

23-07-2023(ஞாயிறு) ஒருநாள் மட்டும் 
கீழ்க்கண்ட ரயில்கள் திருவாரூர் காரைக்குடி பாதையில் செல்கிறது 
* வண்டி எண்: 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

* வண்டி எண் : 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

* வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் 

* வண்டி எண் 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் 

* வண்டி எண் : 20895 இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் வாரந்திர அதிவிரைவு ரயில்

திருவாரூர்  திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. 

எனவே பொதுமக்கள் யாரும் இருப்புபாதை அருகே செல்வதையோ கால்நடைகளை இருப்புபாதை ஓரமாக மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்த்து எச்சரிக்கையுனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது...

இது குறித்து திருவாரூர் மாவட்ட TIDIRUC உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில் 

திருச்சியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் விரைவு ரயில்களான 

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ர‌யி‌ல் பிற்பகல் 11-30 மணியளவிலும் 

புவனேஸ்வரம் அதிவிரைவு ரயில்    முற்பகல் 11-40 மணியளவிலும் 

குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ர‌யி‌ல் பிற்பகல் 1-30 மணியளவிலும் காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதுபோலவே  மறுமுனையில் மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் பிற்பகல் 12-20 மணிக்கும் 

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் பிற்பகல் 2-30 மணிக்கும் திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவு ரயில்கள் அனைத்தும் பிற்பகல் 1-00 மணி முதல் 4-30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி இடையேயான பகுதியை கடந்து செல்லும் என்பதால் இருப்புபாதை ஓரமாக குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். 

சிறுவர்களை இருப்பு பாதை ஓரம் விளையாட அனுமதிக்க வேண்டாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments