கோபாலப்பட்டிணம் ஷபா தெரு (TNTJ பள்ளிவாசல்) 3-வது வீதியில் ரூ.5.28 லட்ச மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பு!
கோபாலப்பட்டிணம் ஷபா தெரு (TNTJ பள்ளிவாசல் தெரு) 3-வது வீதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.28 லட்ச மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் 18/04/2022 அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2021-2022 கீழ் பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.   


அதனடிப்படையில் கடந்த 03/11/2022 அரசு இணையதளத்தில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு சுமார் 97மீட்டர் அளவில் ரூ.5,28000 மதிப்பீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 19/07/2023 அன்று முழுமையாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு 20/07/2023 அன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 


இந்த சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா, அப்துல் மஜீது மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.

புகைப்பட உதவி: உதுமான், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments