திருச்சியில் தண்டாவள பராமரிப்பு பணி: 3 நாட்கள் திருவாரூர்- காரைக்குடி‌ பாதையில் சில ரயில்கள் இயக்கம் (Diversion)



திருச்சியில் தண்டாவள பராமரிப்பு பணி: திருவாரூர்- காரைக்குடி பாதையில் சில ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக (Line block and Power block)  30 ஜூலை 31 ஜூலை 01 ஆகஸ்ட் மூன்று நாட்கள்   கீழ்க்கண்ட ரயில்கள் திருவாரூர் காரைக்குடி பாதையில் செல்கிறது. 

30-07-2023 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் - பட்டுக்கோட்டை -  காரைக்குடி பாதையில் செல்லும் ரயில்கள்





வண்டி எண்: 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம்: 

திருவாரூர்,
பட்டுக்கோட்டை , 
காரைக்குடி, 
சிவகங்கை, 
மானாமதுரை, 
அருப்புக்கோட்டை,

வண்டி எண்: 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம் : 

அருப்புக்கோட்டை, 
மானாமதுரை, 
சிவகங்கை, 
காரைக்குடி 
பட்டுக்கோட்டை, 
திருவாரூர் 

வண்டி எண்: 20895 இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாரந்திர அதிவிரைவு ரயில்

தற்காலிக நிறுத்தம்: 

பட்டுக்கோட்டை,
திருவாரூர் 

குறிப்பு:  புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால் வண்டி எண்: 20895 இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாரந்திர அதிவிரைவு ரயில் இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் 

31-07-2023 திங்கட்கிழமை திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி பாதையில் செல்லும் ரயில்கள் 





வண்டி எண்: 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம்: 

திருவாரூர்,
பட்டுக்கோட்டை,
காரைக்குடி, 
சிவகங்கை, 
மானாமதுரை, 
அருப்புக்கோட்டை 

வண்டி எண்: 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம்: 

அருப்புக்கோட்டை, 
மானாமதுரை, 
சிவகங்கை, 
காரைக்குடி 
பட்டுக்கோட்டை, 
திருவாரூர் 

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் 

தற்காலிக நிறுத்தம்: 

கடலூர் துறைமுகம் , 
மயிலாடுதுறை, 
திருவாரூர்,
பட்டுக்கோட்டை,
காரைக்குடி ,
மானாமதுரை 

01-08-2023 செவ்வாய்க்கிழமை திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி பாதையில் செல்லும் ரயில்கள் 




வண்டி எண்: 16847 மயிலாடுதுறையில் - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம்: 

திருவாரூர் 
பட்டுக்கோட்டை , 
காரைக்குடி, 
சிவகங்கை, 
மானாமதுரை, 
அருப்புக்கோட்டை 

வண்டி எண்: 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ர‌யி‌ல்

தற்காலிக நிறுத்தம்: 

அருப்புக்கோட்டை, 
மானாமதுரை, 
சிவகங்கை, 
காரைக்குடி,
பட்டுக்கோட்டை, 
திருவாரூர் 

வண்டி எண்: 22536 பனராஸ் (வாரணாசி) - இராமேஸ்வரம் வாரந்திர அதிவிரைவு ரயில் 

தற்காலிக நிறுத்தம்: 

திருவாரூர்,
பட்டுக்கோட்டை  

குறிப்பு:  புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால் வண்டி எண்: 22536 பனராஸ் - இராமேஸ்வரம் வாரந்திர அதிவிரைவு ரயில் மண்டபம் வரை மட்டுமே செல்லும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

30 ஜூலை 31 ஜூலை 01 ஆகஸ்ட் மூன்று நாட்கள் திருச்சியில் பராமரிப்பு நடப்பதால் திருவாரூர்  திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக சில ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இருப்புபாதை அருகே செல்வதையோ கால்நடைகளை இருப்புபாதை ஓரமாக மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்த்து எச்சரிக்கையுனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இருப்புபாதை ஓரமாக குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். 
சிறுவர்களை இருப்பு பாதை ஓரம் விளையாட அனுமதிக்க வேண்டாம்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட TIDIRUC உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில்

மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை 

திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் இருப்புபாதைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக  எதிர்வரும் 30-07-2023 (ஞாயிறு)  31-07-2023 (திங்கள்) 01-08-2023 (செவ்வாய்)  ஆகிய மூன்று நாட்களுக்கு வண்டி எண் 16847 /16848 மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 

திருவாரூர் சந்திப்பு பட்டுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புகோட்டை ஆகிய ரயில் நிலைய நிறுத்தங்களுடன் திருவாரூர் காரைக்குடி மானாமதுரை விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - குருவாயூர் 

 31-07-2023 (திங்கள்) அன்று காலை 9-00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 16127 குருவாயூர் விரைவு ர‌யி‌ல் விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி மானாமதுரை விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. 

பயணிகள் நலன்கருதி கடலூர் துறைமுகம் சந்திப்பு மயிலாடுதுறை சந்திப்பு திருவாரூர் சந்திப்பு பட்டுக்கோட்டை காரைக்குடி சந்திப்பு மானாமதுரை சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இராமேஸ்வரம் - புவனேஸ்வர் 

 30-07-2023 (ஞாயிறு) அன்று வண்டி எண் 20895 ராமநாதபுரம் - புவனேஸ்வரம் அதிவிரைவு ரயில் காரைக்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக இயக்கப்படும்.

பயணிகள் நலன்கருதி பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தெற்கு ரயில்வே அறிவிப்பு.

வாரணாசி பனராஸ் - இராமேஸ்வரம் 

30-07-2023  ஞாயிறு அன்று பனாரஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 22536 பனாரஸ் - இராமேஸ்வரம் 
அதிவிரைவு ரயில்  01-08-2023 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 1-20 மணிக்கு மயிலாடுதுறை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் திருச்சி பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி மானாமதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும்.

பயணிகள் நலன்கருதி திருவாரூர் சந்திப்பு மற்றும் பட்டுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வழக்கமான பாதையில் பயணத்தை திட்டமிட்டு இருந்தவர்கள் இந்த வழித்தட மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள மக்கள் தற்காலிகமாக மாற்றுவழியில் இயக்கப்படும் மேற்கண்ட விரைவு ரயில் சேவைகளை திருவாரூர் சந்திப்பு மற்றும் பட்டுக்கோட்டையில் ரயில் நிலையங்களை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments