அறந்தாங்கியில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் காலை நேரத்தில் இணைப்பு ரயில் மூலமாக சென்னை செல்லலாம் வாங்க எப்படினு பார்க்கலாம்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை இயக்கப்பட்டு வருகிறது.
வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (வாரம் மும்முறை)
சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
வண்டி எண் 12606 காரைக்குடி - சென்னை எழும்பூர் (தினமும்)
காரைக்குடி - சென்னை தினசரி அதிகாலை 05.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
அறந்தாங்கி - காரைக்குடி - சென்னை எழும்பூர்
இனைப்பு ரயில்கள் (One Way Connection)
அறந்தாங்கி - காரைக்குடி
வண்டி எண்: 20683 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளிக்கிழமை 3 நாட்கள் மட்டும் அறந்தாங்கியில் இருந்து அதிகாலை 04.11 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு அதிகாலை 04.50 செல்லும்.
அறந்தாங்கி புறப்படும் நேரம் - அதிகாலை 04.11 (திங்கள், புதன், வெள்ளி)
காரைக்குடி சேரும் நேரம் - அதிகாலை 04.50 (திங்கள், புதன், வெள்ளி)
காரைக்குடியில் இறங்கி பல்லவன் ரயிலில் ஏற வேண்டும்
காரைக்குடி - சென்னை எழும்பூர்
வண்டி எண்: 12606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் அதிவிரைவு ரயில் தினசரி அதிகாலை 05.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
காரைக்குடி புறப்படும் நேரம் - அதிகாலை 05.35 (தினசரி)
சென்னை எழும்பூர் சேரும் நேரம் -நண்பகல் 12.15 (தினசரி)
காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலமாக புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் சென்னை எழும்பூர் வரை முக்கிய ஊர்களுக்கு செல்லலாம்.
திரும்ப பல்லவன் ரயில் மூலமாக சென்னையில் இருந்து அறந்தாங்கி வருவதற்கு இணைப்பு ரயில் உள்ளதா ?
ரயிலில் சென்னையில் இருந்து அறந்தாங்கி வருவதற்கு காரைக்குடி வழியாக இணைப்பு ரயில் கிடையாது
அறந்தாங்கி வருவதற்கு இன்னொரு வழி உள்ளது
சென்னை எழும்பூரில் தினசரி மதியம் 03.45 மணிக்கு புறப்படும் பல்லவன் ரயிலில் புதுக்கோட்டை வரையும் (Reservation or Unreserved) பயணம் செய்யலாம் . புதுக்கோட்டைக்கு பல்லவன் ரயில் 09.43 மணிக்கு வந்துவிடும்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பல்லவன் ரயிலுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையம் - புதுக்கோட்டை பேருந்து நிலையம் இடையே செல்ல டவுன் பேருந்து வசதிகள் உள்ளன..
புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்த பிறகு அறந்தாங்கி செல்லும் பேருந்தை பார்த்து ஏறி கொள்ளலாம்.
டிக்கெட் விலை
குறிப்பு: அறந்தாங்கி - காரைக்குடி பயணிக்க வெறும் 40 நிமிடம் பயணம் மட்டுமே Unreserved பொது பெட்டியில் ஏறினால் போதும்.
Unreserved பயணம்
அறந்தாங்கி - காரைக்குடி - 45 ரூபாய்
காரைக்குடி - சென்னை எழும்பூர் - 160 ரூபாய்
Reservation பயணம் (Sitting)
அறந்தாங்கி - காரைக்குடி - 45 ரூபாய்
காரைக்குடி - சென்னை எழும்பூர் - 175 ரூபாய்
Reservation பயணம் (AC)
அறந்தாங்கி - காரைக்குடி - 45 ரூபாய்
காரைக்குடி - சென்னை எழும்பூர் - 620 ரூபாய்
முக்கிய குறிப்புகள்
*சூப்பர் பாஸ்ட் டிக்கெட்டை வைத்து சூப்பர் பாஸ்ட் & எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யலாம், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டை வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே பயணம் செய்ய முடியும், சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணம் செய்ய முடியாது.(தாம்பரம் செங்கோட்டை ரயில் & பல்லவன் ரயில் சூப்பர் பாஸ்ட் வகையை சார்ந்தது).
*ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது நாம் அறியலாம் ரயில்வயின் அதிகார ஆஃப் NTES App மூலமாக க்ஷ தெரிந்து கொள்ளலாம்.. நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் எங்கே வருகிறது என்று ஆஃப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
*அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்ல Unreserved டிக்கெட் எடுக்கும் போது சூப்பர் பாஸ்ட் டிக்கெட் என்று கேட்டு வாங்குங்கள்.
*பல்லவன் ரயில் காரைக்குடியில் இருந்து புறப்படுவதால் Unreserved பெட்டியில் அறந்தாங்கி ரயில் பயணிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.
*பல்லவன் ரயிலில் காரைக்குடி டு சென்னை ரிஸ்ர்வேஷன் செய்தாலே வெறும் 160 ரூபாய் மட்டுமே.
*அறந்தாங்கி ரயில் பயணிகள் காரைக்குடி டு சென்னை பல்லவன் ரயிலில் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டி கொள்ளுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.