மீமிசல் அருகே வேல்வரையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்திய ஆறாம் ஆண்டு பனைவிதை நடும் விழா

மீமிசல் அருகே வேல்வரையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்திய  ஆறாம் ஆண்டு பனைவிதை நடும் விழா நடைபெற்றது 

நிறுவனர் தலைவர் ஆ.சே. கலைபிரபு அவர்களின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கி, ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேள்வரை ஊராட்சி  வேள்வரை ஏரி கரையில் 1036 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது

 புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ்  புதுக் கோட்டை மாவட்டம் அனைத்து ஊராட்சிகள் தோறும் 
1 கோடி பனை விதை நடும் நெடும்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார்கள்  

 இந்த நிகழ்வை ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சுந்திரபாண்டியன், வேள்வரை ஊராட்சி மன்றதலைவர்  த.ஜெயம் தங்கமணி அவர்கள் தொடங்கி வைத்தார்கள் புன்னகை அறக்கட்ளை திரு.ஆ.சே. கலைபிரபு , திரு.ரமேஷ் தங்கமணி முன்னிலையில் நடைபெற்றது

இதில் , புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சி.சிரஞ்சிவி,  மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர், அஜீத்குமார், அரிமழம் ஒன்றிய தலைவர் காடங்குடி P..சக்தி அம்பலம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகு கூத்தையா, ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் பாக்கியராஜ், கரந்தமலை, ராஜேந்திரன், கருப்பையா, கண்ணன்,மற்றும் பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டு ஏரிகரை முழுவதும் நடவு செய்தனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments