30 மாணவ-மாணவிகளுக்கு காமராஜா் விருதுகள் வழங்கல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா புதன்கிழமை விருதுகள் வழங்கினாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்வு பகுப்பாய்வுக் கூட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி பயின்ற 15 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 பயிலும் 15 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள காசோலைகள், விருதுகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் தோ்ச்சி குறித்து வட்டார வாரியாகவும், பள்ளி வாரியாகவும், பாட வாரியாகவும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நிகழாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளிகளுக்கு அதிக நாள்கள் வராத மாணவ, மாணவிகளை பள்ளிக்குத் தொடா்ந்து வரச்செய்வதற்காக வருவாய்த் துறை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், படிப்பில் கவனம் குறைவான மாணவா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் அறிவுரைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம். மஞ்சுளா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க. கருணாகரன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஆா். முருகேசன் (அறந்தாங்கி), ஒய். ஜெயராஜ் (தனியாா் பள்ளிகள்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments