அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி பணியேற்பு விழாபுதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் 8ம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது.


தேர்வு ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி தலைமையில் கடந்த சியர்ஸ் ஆண்டு தலைவர் விகாஸ் சரவணன் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார்.

அறம் ஆண்டின் தலைவராக எம்.சையது பாவா பகுருதீன், செயலாளராக எஸ்.முகமது இப்ராம்ஷா, எஸ்.முருகேசன் ஆகியோருக்கு ஆளுநர் பணியேற்பு செய்து வைத்தார்.

சிறப்பு பேச்சாளர்கள் மகா சுந்நர், கண்ணதாசன், ரோட்டரி மண்டல செயலாளர் பீர்சேக், துணை ஆளுநர் ராமன் பரத்வாஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 

அறம் ஆண்டின் ஆட்சி மன்ற நிர்வாகிகளாக மருத்துவர் தெட்சிணாமூர்த்தி, கான் அப்துல் கபார்கான், மருத்துவர் விஜய், ஜீவா.சீனிவாசன், முனைவர் முஜிபுர் ரஹ்மான், அப்துர் ரஹீம், நியூலுக் கணேசன், கேம்பிரிட்ஜ் அப்துல் பாரி, தெய்வரத்திணம், அப்துல் காதர், முனைவர் முபாரக் அலி, ஜாகிர் உசேன், விஜயகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

செயலாளர் முகமது இப்ராம்ஷா அனைவருக்கும் நன்றி கூறினார். கலந்துகொண்டவர்களுக்கு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments