அறந்தாங்கியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக பள்ளிவாசலை சுற்றி வரும் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் இரண்டாம் நாள் நடைபெற்ற தேரோட்டத்தில் இஸ்லாமிய நண்பர்கள் 3000 பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆடிமாதம் மாதம் 6ம் தேதி திருவவிழா முகூர்தக்காலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீரமாகாளியம்மனுக்கு வீதி உலா நடைபெற்றது.
குறிப்பாக 30 நாட்கள் இந்த கோவிலில் திருவிழாவானது நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீரமாகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் சக்கரத்தில் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மணமேல்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்,பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரின் சிறப்பு அம்சமாக அறந்தாங்கி இருக்கக்கூடிய பெரிய பள்ளிவாசலில் சுற்றி இந்த தேர் வருவதால் இதற்கு இந்த தேருக்கு சிறப்பு அம்சம் என்று கூறுவார்கள்
நேற்று ஜூலை 27 பெரிய பள்ளிவாசல் சுத்தி வரக்கூடிய வேலையில் அங்கு இருக்கக்கூடிய ஜமாத் தலைவர் ஹாஜி SN சேக்அப்துல்லா அலிசேக் முகமது சித்தீக் ஜமாத் துணைத்தலைவர் A கிரீன் முகமது சார்பாக 3000க்கும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினர் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.