வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச டை, பெல்ட், அடையாள அட்டை வழங்கிய பள்ளி மேலாண்மை குழுவினர்!




பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச டை, பெல்ட், அடையாள அட்டை வழங்கினர். 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து தங்களது சொந்த நிதியிலிருந்து மாணவர்களுக்கு அடையாள அட்டை, பெல்ட், டை என சுமார் ரூ.20000 மதிப்பீட்டில் வழங்கினார். இதில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் சுமார் 11 பேர் இணைந்து 125 பேருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் டை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சீனிவாசனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் நிரோஷா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேஷ், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கவிதா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இல்லம் தேடி தன்னார்வ ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராதிகா, கவிதா, சிவரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சீனிவாசன் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் ஜெயஜோதி, மணி, மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சாமிநாதன் நன்றி கூறினார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments