மீமிசல் கல்யாண ராமசாமி கோவிலில் தெப்ப திருவிழா!




மீமிசலில் பிரசித்தி பெற்ற கல்யாண ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி மாத உற்சவ திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா தீர்த்தாண்டதானம், சுந்தரபாண்டியபட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் தங்களது நாட்டுப்படகை மீமிசல் கல்யாண ராமசுவாமி குளத்திற்கு கொண்டு வந்து 4 படகுகளை ஒன்றாக இணைத்து அதன் மேல் அலங்கரிக்கப்பட்ட தளத்தில் கல்யாண ராமசாமி, லட்சுமணர், சீதை ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகள் குளத்ைத நான்கு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments