புதுக்கோட்டையில் கடந்த மாதத்தில் இருந்து தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கிலோ ரூ.100 ஆக உயர்ந்திருந்தது. அதன்பின் விலை குறையாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.140 முதல் ரூ.150-க்கு விற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.170-க்கு விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்றனர். வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் ஒரு வியாபாரியிடம் இருந்து தக்காளியை வாங்கி மற்றொரு வியாபாரி வியாபாரம் செய்வதின் மூலம் விலை அதிகரிக்கிறது.
தோட்டக்கலை துறை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை மூலம் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களின் சேவைக்காக இந்த விற்பனையை தொடங்கினா். அவர்களுக்கும் தக்காளி கிடைப்பது அரிதானதால் திருச்சியில் இருந்து வாங்கி வந்து விற்று வருகின்றனர். இதில் கிலோ ரூ.140 வரைக்கும் விற்று வருகின்றனர். இதில் தினமும் தோட்டக்கலை துறையினருக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவையை அளித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- கத்தரிக்காய் ரூ.70-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.65-க்கும், அவரைக்காய் ரூ.90-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும், சேனைக்கிழங்கு ரூ.70-க்கும், சேப்ப கிழங்கு ரூ.70-க்கும், கருணைக்கிழங்கு ரூ.90-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும் விற்றது. தக்காளி உள்பட காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.