பட்டுக்கோட்டையில், மினி மாரத்தான் போட்டி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
பட்டுக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விழா திட்டத்தின் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அதன் அமைப்பாளர் விஜயகுமார் மினி மாரத்தான் விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.

இந்த மினி மாரத்தான் போட்டியை இன்று காலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த போட்டிகளில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு , 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு, 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை பட்டுக்கோட்டை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ரவி தலைமையில் ஒருங்கிணைந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வழி நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments