கோபாலப்பட்டிணம்‌ உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!கோபாலப்பட்டிணம்‌ உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பாக உமர் முக்தார் மன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று 30/06/2023 வெள்ளிக்கிழமை  ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கௌரவத் தலைவர்:
 NMA.ஜியாவுதீன்

தலைவர்:
நைனா முகமது LLB

துணைத்தலைவர்:
அஸ்மான் கான்

செயலாளர்:
Dr. முகமது ரியாஸ்

பொருளாளர்:
முகம்மது முபாரக் BE

ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யபட்டனர்.

இதில் உமர் முக்தார் இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து சகோதரர்களின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற தூஆ செய்யுமாறும், நிர்வாகிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க GPM மீடியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்படிக்கு 
உமர் முக்தார் இஸ்லாமிய நற்பணி மன்றம்,
கோபாலப்பட்டிணம்,
மீமிசல்.
புதுக்கோட்டை மாவட்டம் 

தகவல்:
ஆலோசனை குழு உறுப்பினர்கள்,
உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments