இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்பி கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை


ஜூலை 18 முதல் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை 

ஜூலை 19 ராமேஸ்வரம் பனாரஸ் வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை. 

மற்ற ரயில் நிலைய நிறுத்தம் தொடர்பான கோரிக்கையையும் விரைந்து பரிசீலிக்க நவாஸ்கனி எம்பி தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை.

இதுகுறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல பொது மக்களின் நெடுநாள் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன்.

தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.

என்னுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 18 முதல் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மற்றும்,

ராமேஸ்வரம் பனாரஸ் வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பல்வேறு ரயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்ல தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றேன்.

பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கையாகிய அந்த ரயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவருமான கே நவாஸ்கனி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments