வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார் அளிக்க தனி செயலி தமிழக காவல்துறை அறிவிப்பு





தமிழ் நாடு முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக செயலி ஒன்று தமிழ்நாடு காவல்துறை உருவாக்கியுள்ளது. இன்று முதல் புதிய செயலி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் போலீஸில் புகார் அளிக்கலாம் 'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொட ரின் 2021-22ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் காவல் துறை தலைமை அலுவலகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஜூலை 2022 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவானது வெளிநாடு வாழ் தமிழர் கள் மற்றும் அவர்கள் குடும் பத்தினரின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக துவக்கப்பட்டது.

இந்நிலையில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை தங்குத டையின்றி பதிவு செய்வ தற்கு ஏதுவாக தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள் ளது. இந்த செயலியானது இன்று முதல் பயன்பாட் டிற்கு வருகிறது.எனவே, வெளிநாடு வாழ் இந்தி யர்களின் இந்த பிரத்யேக செயலியில் புகார்களை பதிவு செய்தவுடன், புகார் தாரருக்கான தனி முகவரி எண் உருவாக்கப்படும். 

வெளிநாடு வாழ் இந்தியர் கள் பிரிவில் பெறப்படும் புகார் மனுக்கள்.சரிபார்ப் பிற்கு பின்னர், சம்பந்தப் பட்ட மாநகர, மாவட்ட காவல்துறையின் விசார ணைக்கு அனுப்பி வைக் கப்படும். பின்னர் உரிய விசாரணைக்கு பிறகு அறிக்கையின் விவரங்கள். வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் உள்ள அதிகாரி யின் அங்கீகாரத்துடன் புகார்தாரருக்கு அனுப் பிவைக்கப்படும். 

புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச்செயலி மூலம் தேதி வாரியாகவும்,நாடு வாரியாகவும், புகரின் வகை வாரியாகவும். புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயலிக்கான இணைப்பு தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் (https:\\eservices. tnpolice.gov.in) இருந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பயனர் வழி காட்டி, தமிழ்நாடு காவல் துறை யூடியூப் சேனலில் (@) tnpoliceoffical) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இச் செயலியில் புகார் தெரிவிப்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருப்பின், வெளிநாடு வாழ் இந்தியர் கள் பிரிவு தொலைபேசி எண்.044-28470025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என  தமிழ்நாடு காவல் துறை  கூறியுள்ளது.

இணையதள முகவரி:-


புகார் அளிப்பது எப்படி வீடியோ வடிவில்:-




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments