புதுக்கோட்டை புத்தக திருவிழா: அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாளர்கள் வழங்கினர்
புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். இதற்காக வாகனம் உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வந்தாலும் அவர்கள் அனைவரும் புத்தகங்கள் வாங்குவதில்லை. குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்படும் மாணவர்களிடம் பெரும்பாலும் புத்தகம் வாங்கும் அளவுக்கு பணம் வைத்திருப்பதில்லை. இதனை அறிந்த சில புத்தக ஆர்வலர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனொரு பகுதியாக அரையப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார், வாசகர் பேரவை தலைவர் விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் 65 மாணவர்களுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments