ஆகஸ்ட்.15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா - தமிழக அரசால் வெளியீடு.!



வரும் ஆகஸ்ட்.15-ஆம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் பா.பொன்னையா, இ.ஆ.ப., அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி1) துறை, நாள் 19.11.1998 அரசாணையின்படி, சுதந்திர தினமான 15.08.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசாணை (நிலை) எண்.130, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4) துறை, நாள் 25.9.2006 அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினமான 15.08.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு அரசால் உருவாக்கப்பட்ட GS-NIRNAY கைபேசி செயலியை பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 15.08.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 18.08.2023- க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று (15.08.2023) நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்
  • கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
  • 2023-24 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம்
  • கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை
  • தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்
  • இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்
  • அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல்
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
  • 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ன் கீழ் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற விவரம் கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
  • 2023-24 ஆம் ஆண்டு ஊரக நூலகங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம் கிராம விவாதிக்கப்படவேண்டும்.
  • ஐல் ஜீவன் இயக்கம்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.
  • தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
  • பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம்
  • இதர பொருட்கள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம்
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
ஆகிய தலைப்பின் கீழ் கிராமசபை கூட்ட பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments