உப்பூர், திருப்பாலைக்குடி பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு




வெயிலின் தாக்கத்தால் உப்பூர், திருப்பாலைக்குடி பகுதியில் கல் உப்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது.

உப்பு உற்பத்தி சீசன்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்குட்பட்ட திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தனேந்தல், சம்பை உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. அதுபோல் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கும். செப்டம்பர் மாத இறுதி வரை கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் இருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கோடைகால சீசன் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால் உப்பு உற்பத்தியில் விளைச்சலும் அதிகமாகவே இருந்து வருவதாக கூறப்படுகின்றது. பாத்திகளில் உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகளை ஏராளமான தொழிலாளர்கள் பெரிய அகப்பை மூலம் பிரித்தெடுத்து அதை அங்கிருந்து வெளியே கொண்டு வந்து மலை போல குவித்து வைத்துள்ளனர்.

ரூ.2,500-க்கு விற்பனை

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட இந்த உப்புகள் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது 1 டன் உப்பு ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 வரை விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உப்பு உற்பத்தியின் விளைச்சலும் அதிகம் என்று உப்பள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments