புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது 

பொதுவாக பேருந்து நிலையம் என்பது அந்தப் பகுதியின் முகமாகக் கருதப்படும். வெளியூா்களில் இருந்து வரும் பயணிகள், இறங்கியவுடன் அவசரத்துக்கு ஒதுங்கவும், தாகத்தைத் தணிக்கவும் முற்படுவா். அதுபோல உள்ளூர் பயணிகளும் வெளியூர் செல்ல பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமாக செல்லலாம்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைமையிடப் பேருந்து நிலையம். திருச்சியிலிருந்து காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், அறந்தாங்கி செல்லும் அனைத்துப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து மதுரை இராமநாதபுரம் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி செல்லும் அனைத்துப் பயணிகளும் புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

மேலும் புதுக்கோட்டையிலிருந்து அருகே உள்ள அறந்தாங்கி, திருமயம், மீமிசல், , கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, மதுரை, ஆலங்குடி, கறம்பக்குடி, தஞ்சை, விராலிமலை, ஆவுடையாா்கோவில், திருச்சி, காரைக்குடி செல்லும் பயணிகள் மட்டுமின்றி, நகருக்குள்ளும் புகரிலும் செல்லும் அத்தனைப் பயணிகளும் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். நாளொன்றுக்கு சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வரை இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில்  புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணையை பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது..

திருப்பூர்.
கோயம்புத்தூர் (கோவை),
சத்தியமங்கலம் (சத்தி),
ஈரோடு, அந்தியூர்,
பழனி,
பொள்ளாச்சி,
கொடைக்கானல்,
திண்டுக்கல்,
குமுளி,
சேலம் ,திருப்பதி,
திருச்செந்தூர்,
நாகர்கோவில் .
வேளாங்கண்ணி, 
சென்னை 

உள்ளிட்ட ஊர்களின் பேருந்துகளின் அட்டவணைகள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது 

Pc Credit: Respective Owner

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments