மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம்




கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுதா, அன்புக்கரசி, லெனின், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும், மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments