திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்களால் அவதி




ஆர்.எஸ்.மங்கலம்,-திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்களால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீனவ கிராமமான அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலிருந்து 500 மீ.,ல் ஊருக்குள் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை பஸ் ஸ்டாப் பகுதியிலே பயணிகளை இறக்கி விட்டு செல்லும் நிலை உள்ளது.

இதனால் மெயின் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள 500 மீ.,க்கு கிராம மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தனியார் பஸ்கள் ஊருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று வருவது போல், அரசு பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று வர வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments