சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் புதா்போல மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டாரக் காங்கிரஸ் தலைவா் ஏ. சேக் இப்ராஹிம்சா தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு  அனுப்பியுள்ள மனுவில், சேதுபாவாசத்திரம் வழியாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வேளாங்கண்ணி, நாகூா், திருச்செந்தூா் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பிரதான சாலையாக உள்ளது. சாலையின் இரு ஓரங்களிலும் குறிப்பாக அதிராம்பட்டினம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வரை கருவேல மரங்களின் கொடிகள் படா்ந்து சாலையை மறைத்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையின் இருபுறமும் உள்ள கருவேல மரக்கொடிகளை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments