19-ஆம் நூற்றாண்டு காலத்தில் பாம்பன் முனையம் (Terminal) & சந்திப்பு (Junction) ரயில் நிலையம்!




இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் உள்ள  முன்பு பாம்பன்  ரயில் நிலையம் முனையமாகவும் , பின்னர் சந்திப்பு நிலையமாகவும் இருந்தது என்றால் பலருக்கு எப்படி என்ற கேள்வி எழும்புகிறது. 

ஆங்கிலேய அரசு இராமேஸ்வரம், மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களை ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம்  இணைக்க திட்டமிட்டு ரயில் பாதை  பணிகள் தொடங்கப்பட்டு 01.09.1906 ஆம் ஆண்டு  பாம்பன் - இராமேஸ்வரம் மீட்டர்கேஜ் ரயில் பாதை  பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் 10.12.1908 ஆம் ஆண்டு பாம்பன் - தனுஷ்கோடி  மற்றும் தனுஷ்கோடி படகு துறைமுகம் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இராமேஸ்வரம் தீவு  முதல் முறையாக பார்த்த நவீன தரைவழி போக்குவரத்து என்றால் அது ரயில் தான். தீவிற்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பாகங்களாக படகுகளில்  கொண்டு சென்று பாம்பன் ரயில் நிலையத்தில் ஒன்றினைக்கப்பட்டு(assembled) ரயில்கள்  இயக்கப்பட்டது. 
 
இராமேஸ்வரத்திற்கும் , தனுஷ்கோடிக்கும் முனையமாக செயல்பட்டுவந்த பாம்பன் ரயில் நிலையம் 1914ம் ஆண்டு பாம்பன் ரயில் தூக்கு பாலம் கட்டுமானம் முடிவுற்ற நிலையில் பாம்பன் சந்திப்பு ரயில் நிலையமானது.
 
தனுஷ்கோடி சென்று அங்கு படகில் ஏறி தலைமன்னார் சென்று. அங்கிருந்து கொழும்பு செல்லும் வசதி கிடைத்தது.  5 (including stable line) தண்டவாளங்கள் கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த பாம்பன் சந்திப்பு ரயில் நிலையம் 1964 டிசம்பர் மாதம் புயலில்  தனுஷ்கோடி அழிந்ததோடு அதன் பொலிவிழந்து ஒரு நிறுத்த ரயில் நிலையமாக  தற்போது காட்சியளிக்கும் பாம்பன் ரயில் நிலையம்.

முதல் படம்: பாம்பன் சந்திப்பிற்கு காரணமான பாதை வரைபடம் PBM - பாம்பன் , RMM - இராமேஸ்வரம்,  DNSKD - தனுஷ்கோடி இந்த குறியீடு இந்தியன் ரயில்வேயின் அதிகாரபூர்வ ரயில் நிலைய குறியீடுகள்.

இரண்டாம் படம்: 1914 ம் ஆண்டு  சென்னை எழும்பூர் - தனுஷ்கோடி போட்மெயில் ரயில் முதன் முறையாக பாம்பன் பாலத்தை கடக்கும் காட்சி 

மூன்று மற்றும் நான்காவது படங்கள் :
1960 ஆம் ஆண்டு பாம்பன் சந்திப்பு ரயில் நிலையத்தின் தெற்கு ரயில்வே வெளியிட்ட நேர அட்டவணை

ஐந்தாவது படம்: பாம்பன் பாலம் 1964 புயலுக்கு பிறகு உடைந்த நிலையில் உள்ள படம்

ஆறாவது படம் : பாம்பன் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை.
புகைப்படங்கள் பல்வேறு காலகட்டத்தில் பலராலும் எடுக்கப்பட்டது. புகைப்பட உரிமை அதை எடுத்தவரையே சாரும்.







Courtesy : Najib Akbar & Aruppukottai Rail News

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments