கோட்டைப்பட்டினத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு




மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராம நிர்வாகிகள், மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணிகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 32 மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், புதுக்குடி, அய்யம்பட்டினம், வடக்கு அம்மாபட்டிணம், முத்துகுடா ஆகிய பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொன்னகரம், புதுக்குடி, கீழ குடியிருப்பு, கிருஷ்ணாஜிபட்டிணம் ஆகிய பகுதிகளில் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டித் தரப்படும் மற்றும் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணி ரூ.15 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது என்று பேசினார். 

இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் சீனியர் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments