திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய கொடூரம்! வீடு புகுந்து பள்ளி மாணவனை வெட்டிய சம்பவம் 6 சிறார்கள் கைது நடந்தது என்ன முழு விவரம்




திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 

இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 

ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது 


அதற்கு சின்னதுரை, சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சின்னதுரை வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல், சின்னதுரையை சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கை சந்திரா செல்வி அவர்களை தடுக்க முயன்றபோது, அவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், அந்த கும்பல் தப்பியோடியது. பலத்த ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த சின்னதுரை, சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் உட்பட 6 சிறுவர்களுக்கு இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவர்களை கைது செய்த போலீசார் 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்

சக மாணவனையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரியில் அண்ணன், தங்கை மீது நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"நாங்குநேரி விவகாரம்; கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது; சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும்; மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள் இருசக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை சாதிய - மதவெறி அமைப்புகள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது; 

அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும்; சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்; வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவன செய்ய வேண்டும்; அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ், 

'கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்' என பதிவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

சமூகநீதிக்கான அரசு இது!

பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்!”

நாங்குநேரியில் +2 மாணவர், அவரது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சி சீமான்

தம்பி சின்னத்துரை மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரையும், அவரது தங்கையும் "சாதிவெறியர்களால் வீடுபுகுந்து தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் சிலரால் சாதியப்பாகுபாடு காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததால் தம்பி சின்னத்துரை மீதும், தடுக்க வந்த அவரது தங்கை மீதும் கொலைவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டு, இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், இத்தாக்குதலின்போது அதிர்ச்சி தாளாது அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் இறந்து போனதுமான கோர நிகழ்வுகள் பெரும் மனவேதனையளிக்கின்றன.

ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய அறிவுக் கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே சாதியரீதியாகப் பாகுபாட்டுணர்வு காட்டப்படுவதும், அதன்விளைவாக கொடும் வன்முறை ஏவப்பட்டதுமான நிகழ்வுகள் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன. பள்ளி, கல்லூரி எனும் கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவை கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும். "ஒழுக்கத்தின் மூலமான உயர்ந்த குணங்களும், செயல்பாடுகளும்தான் பெருமையே ஒழிய, சாதியல்ல” என்கிறார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அப்படி, ஒழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தினாலும், கல்வித்திறனாலும் சிறந்த மாணவனாக விளங்கிய தம்பி சின்னத்துரையை சாதியத்தினைக் கொண்டு தாழ்த்த முற்படுவதும், ஒடுக்க நினைப்பதும், அதன் நீட்சியாக வன்முறையை ஏவிவிட்டதுமான கொடுங்கோல் போக்குகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.


ஆகவே, இவ்விவகாரத்தில் சாதிவெறியோடு கொலைவெறித்தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், தம்பி சின்னத்துரைக்கும், அவரது தங்கைக்கும் உயரிய சிகிச்சை அளித்து, அவர்கள் மீண்டுவரவும், கல்வியினைப் பாதுகாப்பாகத் தொடரவும் வழிவாய்ப்புகளைச் செய்துதர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments