நாகுடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்




அறந்தாங்கி நாகுடி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். இதுவரை தண்ணீர் இல்லாமல் சாகுபடி அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும். குறுவை சாகுபடி பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தர்மராஜன், ராஜேந்திரன், விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் மாதவன், மாநில குழு உறுப்பினர் தண்டாயுதபாணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments