பட்டுக்கோட்டை டூ காரைக்குடி சுதந்திர தின 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் ரயில் சுற்றுலா
இந்திய நாட்டின் 75 ம் ஆண்டுசுதந்திர தின விழா நிறைவை முன்னிட்டும்,பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்,
இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு  இணங்க பட்டுக்கோட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி  யுவடூரிசம் கிளப் சார்பில் 12.08.2023 சனிக்கிழமை காலை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின்  200  மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் 

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் காரைக்குடி இரயிலில் காலை 10.00 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வரை ரயில் சுற்றுலா சென்று மாலை அதே ரயிலில் பட்டுக்கோட்டைக்கு திரும்பினார்கள்.

காலையில் இரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பி.பெத்துராஜ் பட்டுக்கோட்டை இரயில் நிலைய அதிகாரி பிரின்ஸ் குமார்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் வி.சுப்ரமணியன் பள்ளி முதல்வர் பி.ரமேஷ்

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் துணை செயலாளர் மு.கலியபெருமாள் செயற்குழு உறுப்பினர்  ஆ.இராமமூர்த்தி உறுப்பினர்கள் வே.சுப்ரமணி சி.தைனீஸ்ராஜ் ஆகியோர்  மாணவர்களுக்கு இரயில் பயணம் பற்றியும் ,பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும் விளக்கம் அளித்து மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்
News Credit : Pattukottai Rail Association
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments