கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் 19, 20-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களில் கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம்கள்

இந்த 2 கட்டமாக நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகிற 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்-04322-295022, வாட்ஸ்-அப் எண்- 94450 45622 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments