சென்னை வாழ் புதுக்கோட்டை வாசியா நீங்கள்? சென்னையில் இருந்து பகல் நேரத்தில் ஊருக்கு கேளம்புறிங்களா? இந்த பதிவு உங்களுக்கானது தான்!
பொதுவாக சென்னையிலிருந்து காலையில் புறப்பட்டு புதுக்கோட்டை வருதற்கு வாரத்தில் செவ்வாய் & சனி தவிர மற்ற நாட்களில் புதுக்கோட்டை வருவதற்கு நேரடி ரயில் சேவைகள் இல்லை.

இதனால்   மற்ற நாட்களில் வருவதற்கு 

சோழன் SF(தினசரி-07:15 am), 
குருவாயூர் Exp.(தினசரி -09:00 am), 

இவை இல்லமால் அஜ்மீர்-ராமேஸ்வரம் 'ஹம்சபார்(திங்கள் மட்டும் -09:45 am)

பகத் கி கோத்தி -திருச்சி 'ஹம்சபார்'(வெள்ளி மட்டும் -09:45 am) ரயில்களை பயன்படுத்திவருகின்றனர். 

(14/08/23) முதல் சோழன், குருவாயூர், 2 ஹம்சபார் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 

1.சோழன் SF(வழி மெயின் லைன்)

சென்னை எழும்பூர்- 07:45 am காலை புறப்படும் 
திருச்சி - 03:00 pm மதியம் வரும் 

2.குருவாயூர் Exp ( வழி காட் லைன்)

➧சென்னை எழும்பூர்- 09:45 am காலை புறப்படும் 
➧திருச்சி - 03:00 pm மதியம் வரும் 

3.அஜ்மீர்-ராமேஸ்வரம் 'ஹம்சபார்'(திங்கள் மட்டும்) 

➧சென்னை எழும்பூர்- 09:55 am காலை புறப்படும் 
➧திருச்சி - 03:15 pm மதியம் வரும் 

4.பகத் கி கோத்தி -திருச்சி 'ஹம்சபார்'(வெள்ளி மட்டும்)

➧சென்னை எழும்பூர்- 09:55 am காலை புறப்படும் 
➧திருச்சி - 03:30 pm மதியம் வரும்

மேற்கண்ட 4 ரயில்களில் திருச்சி சந்திப்பிற்கு வருபவர்கள் அலைச்சல் இல்லாமல் சனி தவிர மற்ற 6 நாட்களில் திருச்சியிலிருந்து மாலை 04:00 pm மணிக்கு புறப்படும் 06887/திருச்சி-காரைக்குடி-விருதுநகர் சிறப்பு பயணிகள் ரயிலில் புதுக்கோட்டைக்கு மாலை 04:53 மணிக்கு வரலாம். 

திருச்சி வரை முன்பதிவு செய்து வருபவர்கள் திருச்சி-புதுக்கோட்டை இடையே பயணிக்க  திருச்சி சந்திப்பில் தனியாக ₹35/- ரூபாய் கொடுத்து முன்பதிவில்லா டிக்கெட் பெறவேண்டும் அல்லது UTS மொபைல் செயல் வாயிலாகவும் முன்பதிவில்லா டிக்கெட் பெறலாம். 

மேற்கண்ட சோழன் & குருவாயூர் ரயில்களில் சென்னையிலிருந்து  முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் எடுத்து வருபவர்களாக இருந்தால் சென்னையிலிருந்து நேரடியாக புதுக்கோட்டைக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு திருச்சி வந்து மேற்சொன்ன இணைப்பு ரயிலான 06887/திருச்சி-காரைக்குடி-விருதுநகர் சிறப்பு பயணிகள் ரயில் மூலம் புதுக்கோட்டை வரலாம்.

புதுக்கோட்டைக்கு நேரடியாக சென்னையிலிருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறும்போது ₹20 ரூபாய் மிச்சம் ஆகும். 

இதன்படி முன்பதிவில்லா டிக்கெட் கட்டணம்:

➧சோழன் ரயிலில்(சூப்பர் பாஸ்ட்)
சென்னை - புதுக்கோட்டை(வழி மயிலாடுதுறை) -₹165/-

➧குருவாயூர் ரயிலில்(எக்ஸ்பிரஸ்)
சென்னை - புதுக்கோட்டை(வழி விருத்தாச்சலம்) -₹135/-

சென்னை வாழ் புதுக்கோட்டை வாசிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும்.

இவ்வாறு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்று ரயில் மாறிவரும்பொழுது புதுக்கோட்டை ரயில் நிலைய வருவாய் உயர்வதுடன் வழித்தடத்திற்க்கான தேவையையும் ரயில்வே துறைக்கு அறிய உதவும்.

News Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments