கட்டுமாவடியில் பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கல் 

கட்டுமாவடியில் பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது 

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுமாவடி பள்ளி வளர்ச்சி குழு சார்பாக பள்ளி வளர்ச்சி குழு தலைவர்  காந்தி சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் கட்டுமாவடி அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.K.M ஷிஹாபுத்தீன்  அறக்கட்டளை சார்பாக பொருட்கள் வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு கட்டுமாவடியில் இயங்கி வரும் பள்ளி வளர்ச்சி குழுவின் சார்பாக பள்ளிக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. பீரோ, டேபிள், சேர், மின்விசிறி, சுவர் கடிகாரம், பிரிண்டர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசையை டெம்போ வேனில் ஏற்றப்பட்டு உப்பளம் ரோட்டில் இருந்து புறப்பட்டு பள்ளியை வந்தடைந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளர்ச்சி குழுவினரை வரவேற்றனர். சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த சீர்வரிசை பள்ளிக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் அறக்கட்டளை தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

மேலும் இந்நிகழ்வில் கட்டுமாவடி பள்ளி வளர்ச்சி குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் , முன்னாள் மற்றும் இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அறக்கட்டளையின் தலைவர் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments