தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மூன்று ரயில் நிலையங்களில் பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.




இந்திய ரெயில்வே துறை சார்பாக ரெயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது மருந்தகம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வினியோகிக்கும் விதமாக பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ், அந்த மருந்தகத்தில் 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்து கிடைக்கும். தற்போது இந்த மக்கள் மருந்தகம் ரெயில் நிலையங்களில் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 76 ரெயில் நிலையங்களில் மக்கள் மருந்தகம் கொண்டு வரப்பட உள்ளதாக ரெயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. 

அதன்படி முதல் கட்டமாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் புதிய மக்கள் மருந்தகம் செயல்பட உள்ளது. இதன் மூலம் ரெயில் பயணிகள் பயன்பெறுவார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments