மத்திய அரசின் சாதனை விருது; 18 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
பெண்கள் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், கல்விசார் சாதனைகள், சமூக சேவை, கலை மற்றும் கலாசாரம், வீரம், விளையாட்டு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் சிறந்த விளங்கிய 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள், கல்விசார் சாதனைகள், சமூக சேவை, கலை மற்றும் கலாசாரம், வீரம், விளையாட்டு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் சிறந்த விளங்குகின்ற 18 வயதிற்குட்பட்ட தகுதியான நபர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04322-222270 மூலமோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments