மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயராணி சேகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடனம் நாடகம் மாறுவேடம் ஆகியவை நடைபெற்றது சுதந்திர தின விழாவை ஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி கிராம கல்வி குழு தலைவர் சக்தி சேகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சிதா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

ஊராட்சியில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசு பாராட்டுச் சான்றிதழும் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியில் தன்னலமற்ற சிறந்த சேவையாற்றிய நான்கு பேருக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு சக்தி சேகர் அவர்களால் பரிசும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது வெள்ளூர் ஊராட்சியில் கொரோனா காலம் தொட்டு தற்போது வரை மக்களுடைய நோய்களுக்கு சிறந்த தீர்வை மக்களோடு மக்களாக கலந்து பணியாற்றி வரும் திருமதி இந்திரா கிராம சுகாதார செவிலியர் வெள்ளூர் ஊராட்சி கிராம சுகாதார பணியாளர் கருப்பையா வெள்ளூர் நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ரமேஷ் குமார்  ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் திருமதி அஞ்சம்மாள் ஆகியோருடைய சேவையை பாராட்டி பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு சீனிவாசன் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments